சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: 10-க்கும் மேற்பட்ட அறைகள் சேதம்
*செய்தி:*
விருதுநகர், ஜூன் 28: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
ரசாயன பொருட்களில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் ஆலையின் 10-க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலும் சேதமடைந்தன.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பட்டாசு ஆலை செயல்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து சாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments