*OP சீட்டு இனி மொபைலில்! அரசு மருத்துவமனைகளில் QR Code வசதி அறிமுகம் -



சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சைக்கான OP சீட்டு பெறும் முறையை எளிமைப்படுத்தும் வகையில், QR Code மூலம் மொபைலிலேயே OP சீட்டு பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. மருத்துவமனை வளாகத்தில் உள்ள QR Code-ஐ மொபைலில் Scan செய்தால் போதும், உடனடியாக OP சீட்டு Digital ஆக கிடைத்துவிடும்.

இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் OP சீட்டுக்கு பயன்படுத்தக்கூடிய செயலி விரைவில் அறிமுகமாகும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இணையதளம் வாயிலாக OP சீட்டு பெறும் சேவையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் இந்த QR கோடு சேவை கொண்டு வரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments