புதுடெல்லி: குழந்தைகள் நலனை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு ‘மிஷன் வாத்சல்யா’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தகுதியான குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 குழந்தைகள் வரை இந்த உதவியை பெறலாம். இந்த நிதியுதவி தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வருமான சான்றிதழ் முக்கிய ஆவணமாக கேட்கப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்புவோர் அருகில் உள்ள பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments