சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் வசதிக்காக புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயிலில் உரத்த குரலில் பேசுதல் மற்றும் ஸ்பீக்கர் மோடில் அலைபேசியை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹெட்போன் இன்றி இசை அல்லது வீடியோக்களை ஒலிக்கச் செய்வதும் விதிமீறலாக கருதப்படும்.
இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம். தேவைப்பட்டால் விதிமீறும் பயணிகள் மெட்ரோ வளாகத்திலிருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது.
எனவே பயணிகள் ஹெட்போன்களை பயன்படுத்தவும், உரத்த குரலில் பேசுவதையும் ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டையும் தவிர்க்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
0 Comments