திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில், வாலிபர்-மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டம் 24.07.2026 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் தொடங்கும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு மாணவர்களின் கல்வி மற்றும் சமூக நீதியை பாதிப்பதாகக் கூறி, அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் ஜனநாயக சக்திகள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்குமாறு வாலிபர்-மாணவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
0 Comments