நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியில் புதுமண தம்பதிக்காக ஹனிமூன் அலங்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரயில் பெட்டியில் பூக்கள், பலூன்கள் மற்றும் வண்ண விளக்குகள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விதிமுறைகளை மீறி அனுமதி அளித்ததாக கூறப்படும் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா ரயில் நிலையத்தில் அனுமதியின்றி நுழைந்து அலங்காரம் செய்த நபர் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments