கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10.07.2026) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கலந்து கொண்டு, கரூரில் கடந்த 27.09.2025 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்தப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலனில் அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவதாகவும், அவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பாக அமைய தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments