முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இன்றைய பழமொழி

 *நம்ம ஊர் மீடியா -  இன்றைய பழமொழி* 🎙️ > *"விளையும் பயிர் முளையிலே தெரியும்"* *பொருள்:*  ஒருவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அவர்களின் இளமை பருவத்திலேயே அல்லது ஆரம்பத்திலேயே கணிக்க முடியும். சிறு வயதில் காட்டும் திறமையும், ஒழுக்கமும் தான் பெரியவனான பிறகும் தொடரும்! 🌱✨

> 🍋 வாசலில் எலுமிச்சம் பழம் கட்டுவது எதற்காக தெரியுமா?

   

இன்றைய ஆன்மீக சிந்தனை | இன்று நல்லது நடக்கும்!

  இன்றைய ஆன்மீக சிந்தனை | இன்று நல்லது நடக்கும்! | இன்றைய ஆன்மீக சிந்தனை (23-09-2025) கவலையை விடு, கடவுளை நம்பு வாழ்க்கையில் நாம் எவ்வளவு பெரிய துன்பத்தில் இருந்தாலும், அந்த துன்பம் நிரந்தரமானது அல்ல. இரவு எவ்வளவு தான் இருட்டாக இருந்தாலும், விடியல் நிச்சயம் வரும் என்பது போல, நம் கஷ்டங்களும் ஒரு நாள் விலகும். நமக்கு நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து, இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து உன் கடமையை செய். பலனை இறைவனிடம் விட்டு விடு. இன்று உனக்கு நிச்சயம் நல்லது நடக்கும். நாம் அடுத்தவர்களுக்கு செய்யும் ஒரு சிறு உதவி கூட, இறைவனுக்கு செய்யும் பூஜைக்கு சமம். எனவே இன்று ஒருவருக்காவது உதவி செய்யுங்கள், இறைவன் உங்களுக்கு துணை இருப்பார். இன்றைய மந்திரம்: > `ஓம் நமோ நாராயணாய!` > இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி நாளை தொடங்குங்கள். *நம்ம ஊர் மீடியா - ஆன்மீகம்*

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை! இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த வானம்

  சென்னை, செப் 22, 2026 தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று (செப். 21) மாலை சென்னையில் திடீரென பலத்த இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.  சென்னை அம்பத்தூர், தாம்பரம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், பாரிமுனை, மயிலாப்பூர், கிண்டி, தி.நகர், வேளச்சேரி, அடையார், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது.  நேற்று இரவு முழுவதும் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் காலையில் வெயிலில் வாடிய மக்களுக்கு சற்று ஆறுதல் கிடைத்தாலும், அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவோர் கடும் அவதிக்குள்ளாகினர். 

வில்லிவாக்கம் விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கத்தில் கரைப்பு!

  சென்னை: வில்லிவாக்கம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று (செப்டம்பர் 20) பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டன. வில்லிவாக்கம் சிட்கோ நகர் மற்றும் பாரதியார் நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், நேற்று மாலை 4 மணியளவில் ஊர்வலமாக புறப்பட்டன. மேளதாளம் முழங்க, டி.ஜே இசைக்கு இளைஞர்கள் நடனமாடியபடி, "கணபதி பப்பா மோரியா, அடுத்த வருஷம் ஜல்தி ஆவ்" என்ற கோஷத்துடன் ஊர்வலம் பட்டினப்பாக்கத்தை அடைந்தது. பட்டினப்பாக்கம் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் அனைத்து சிலைகளும் பாதுகாப்பாக கடலில் கரைக்கப்பட்டன. பக்தர்கள் கண்ணீர் மல்க விநாயகருக்கு பிரியாவிடை கொடுத்தனர். இந்த நிகழ்வில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். எந்தவித அசம்பாவிதமும் இன்றி விழா அமைதியாக நிறைவடைந்தது. *வில்லிவாக்கம் விநாயகர் சதுர்த்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோவை காண எங்கள் YouTube Channel-ஐ பாருங்கள்.* _Author: Namma Oor Media Team_ _Location: Villivakkam, Chen...

தெரிந்து கொள்வோம்

  ரயிலில் பயணம் செய்யும் போது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்.. அப்படி என்றால் என்ன அர்த்தம்? WDP 3A #முதல்எழுத்து: முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும் W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்) Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர்) Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்) N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்) WDM 2 #இரண்டாம்எழுத்து: இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும். D - டீசல் இஞ்சின் A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction) C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction) CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction) B - பேட்டரி சக்தி இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின். YG #மூன்றாம்_எழுத்து: மூன்றாம் எழுத்து ரயிலின் ...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

 இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் தேதி:19/9/26

ஞாயிற்றுக்கிழமை CFS, காலி கண்டெய்னர், கனரக வாகனங்களுக்கு தடை!

 Gopi 12 News- 🚨 *BREAKING |  காவல்துறை முக்கிய அறிவிப்பு! M6 மணலி போக்குவரத்து காவல் செப்.20 ஞாயிறு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு > 200 அடி சாலை, பொன்னேரி நெடுஞ்சாலையில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை CFS, காலி கண்டெய்னர், கனரக வாகனங்களுக்கு தடை! > இரவு 8 மணிக்கு மேல் மட்டுமே அனுமதி! > Source: M6 மணலி காவல் நிலையம் - 17.09.2026

சேத்துப்பட்டு - வந்தவாசி சாலையில் கோர விபத்து

  சேத்துப்பட்டு - வந்தவாசி சாலையில் கோர விபத்து! லாரி - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு! கலசப்பாக்கம் தாலுக்கா காந்தப்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தரம், தங்கராஜ் ஆகிய 2 பேர் பரிதாபமாக பலி. கடலாடி செல்வராஜ் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி. சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை!

புரட்டாசி 1 - பெருமாள் மாதம் பிறந்தது: வெள்ளிக்கிழமையில் இரட்டிப்பு புண்ணியம்!

*🔴 LIVE • ஆன்மீக செய்திகள் | GOPI 12 NEWS* *புரட்டாசி 1 - பெருமாள் மாதம் பிறந்தது: வெள்ளிக்கிழமையில் இரட்டிப்பு புண்ணியம்!* சென்னை, செப்.18: தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமானதாக கருதப்படும்  புரட்டாசி மாதம் இன்று (18.09.2026) வெள்ளிக்கிழமை பிறந்தது.  பராபவ வருடம் புரட்டாசி 1-ம் நாள் வெள்ளிக்கிழமையில் தொடங்குவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.  *இன்றைய சிறப்பு:* இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமி வழிபாடும், புரட்டாசி மாதம் என்பதால் பெருமாள் வழிபாடும் சேர்ந்து இரட்டிப்பு பலனை தரும் நாள். இன்று முதல் அக்டோபர் 17 வரை புரட்டாசி மாதம் நீடிக்கிறது.  சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவிடந்தை, திருநீர்மலை உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், துளசி அர்ச்சனை நடைபெறுகிறது. பக்தர்கள் இன்று மாலை 4.45 முதல் 5.45 வரை வீட்டில் விளக்கேற்றி, துளசி சமர்ப்பித்து "ஓம் நமோ நாராயணாய, கோவிந்தா கோவிந்தா" என்று கூறி வழிபட செல்வ வளம் பெருகும். நாளை (19-ம் தேதி) முதல் புரட்டாசி சனிக்கிழமை விரதம் தொடங்குகிறது. பக்தர்கள் அசைவம் தவிர்த்து...

UPI பண பரிவர்த்தனைக்கு புதிய கட்டணம்? MDR விகிதம் விவரம்!

   சென்னை: UPI மூலம் பணம் செலுத்தும் போது வணிகர்களுக்கான MDR கட்டண விவரம் வெளியாகியுள்ளது. > *ரூ.2,000 வரை - கட்டணம் 0%* - முழு தொகையும் வணிகருக்கு கிடைக்கும். > *ரூ.2,000-க்கு மேல் - 0.4% MDR* வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக ரூ.3,000-க்கு ரூ.12, ரூ.10,000-க்கு ரூ.40, ரூ.75,000 மேல் அதிகபட்சம் ரூ.300 வரை. > *கட்டணம் இல்லாதவை: > தனி நபர்களுக்கு இடையிலான (P2P) பரிவர்த்தனை மற்றும் ரூ.2,000 வரையிலான வணிக பயன்பாட்டுக்கு கட்டணம் இல்லை. > *ரூ.5 கட்டணம்:* ரூ.2,000-க்கு மேல் ரயில் டிக்கெட் முன்பதிவு, மொபைல் ரீசார்ஜ், எரிபொருள், காப்பீட்டு சேவைகளுக்கு கட்டணம் உண்டு.

சென்னையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை - பேகம் சாகிப் தெருவில் பக்தர்கள் திரள்

சென்னை மவுண்ட் ரோடு, பேகம் சாகிப் தெருவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மாண்டமான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வித்தியாசமான அலங்காரத்தில், இரண்டு காளைகள் பூட்டிய ரதத்தில் கம்பீரமாக அமர்ந்தபடி, கையில் சங்கு, சக்கரத்துடன் நான்கு கரங்களுடன் விநாயகர் அருள்பாலிக்கிறார். ரதத்தை ஓட்டுபவராக சிறுவன் வேடத்திலும், முன்புறம் அம்மன் சிலையும் வைக்கப்பட்டு கண்கவர் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாலை, மாவிலை தோரணங்கள், வண்ண விளக்குகளால் பந்தல் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பேகம் சாகிப் தெருவில் வைக்கப்பட்டுள்ள இந்த விநாயகரை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

சிட்கோ நகர் 7-வது பிளாக்கில் 19-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல தொடக்கம்! வில்லிவாக்கம்

 சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் 7-வது பிளாக் நண்பர்கள் குழு சார்பில் 19-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஸ்ரீ வெற்றி விநாயகர் விழாக்குழு மூலம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. *இடம்:* முருகன் கோயில் அருகில், 7-வது பிளாக், 9-வது மெயின் ரோடு, சிட்கோ நகர், வில்லிவாக்கம், சென்னை - 49 நிகழ்ச்சி நிரல்: *14.09.2026 திங்கள்:* காலை 5 மணி கணபதி ஹோமம், 9 மணி சிறப்பு பூஜை, மதியம் 12 மணி பிரசாதம், மாலை 6 மணி சிறப்பு பூஜை *15.09.2026 முதல் 18.09.2026 வரை:* தினமும் காலை 9 மணி மற்றும் மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்குதல், 18-ம் தேதி குத்துவிளக்கு பூஜை *19.09.2026 சனி:* காலை 9 மணி பூஜை, மதியம் 12 மணி சமபந்தி விருந்து, மதியம் 3 மணி சிறுவர் விளையாட்டு போட்டி, மாலை 6 மணி பரிசு வழங்குதல், மாலை 7 மணி வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் திருவீதி உலா *20.09.2026 ஞாயிறு:* காலை 9 மணி பூஜை, காலை 10 மணிக்கு மேல் பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு விசர்ஜனம் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு விநாயகர் அருள் பெறுமாறு 7-வது பிளாக் நண்பர்கள் குழு அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தில் திருப்பதி திருமலை திருக்கொடை விழா கோலாகலம்!

 சென்னை, வில்லிவாக்கம் - செப் 15: சென்னை வில்லிவாக்கத்தில் இன்று காலை திருப்பதி திருமலை திருக்கொடை விழா மிக சிறப்பாகவும், பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது. இந்த விழாவில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டன. காலை 6 மணி முதலே கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விழாவின் முக்கிய அம்சமாக திருமலை வெங்கடாசலபதியின் திருக்கொடை தரிசனம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வில்லிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அண்ணாநகர், கொளத்தூர், பாடி, முகப்பேர் ஆகிய பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், "திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக இங்கேயே திருமலை தரிசனம் கிடைக்கும் வகையில் இந்த திருக்கொடை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டிருந்தன. *Gopi 12 News-க்காக வில்லிவாக்க...

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் நகரில் பிரம்மாண்ட விநாயகர் சிலை - கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

 சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மாண்டமான விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 அடி உயரத்தில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த விநாயகரை தரிசிக்க தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சிறப்பு பூஜைகள், அன்னதானம் என விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இதுவே மிகப்பெரிய விநாயகர் சிலை என பொதுமக்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர்.

கொளத்தூர் ரூ.20 நோட்டுகளால் ஆன பிரம்மாண்ட விநாயகர் - பக்தர்கள் வியப்பு!

  சென்னை கொளத்தூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20 ரூபாய் நோட்டுகளால் பிரம்மாண்ட விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 10 அடி உயரத்தில், முழுவதும் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக அமர்ந்திருக்கும் இந்த விநாயகரை காண சுற்றுவட்டார மக்கள் ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர். செல்வத்தை அள்ளித்தரும் விநாயகராக இவர் பக்தர்களால் போற்றப்படுகிறார்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் முதலாம் ஆண்டு

  GOPI 12 NEWS  முதலாம் ஆண்டு விழா அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். www.Gopi12.in

🛕 வில்லிவாக்கத்தில் இன்று ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம்!

சென்னை வில்லிவாக்கத்தில் இன்று ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடைபெறுகிறது. நிகழும் ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 23ஆம் நாள் (10.09.2026) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோயில், பாலியம்மன் கோயில் வழியாக சிட்கோ நகர், பாடி மேம்பாலம் கீழ் பகுதியில் வந்தடையும். பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு இறைவன் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. *இடம்: வில்லிவாக்கம், சென்னை* நேரம்: இன்று காலை 10:00 மணி

சென்னை கொரட்டூர் ஏரியில் டன் கணக்கில் செ_து மிதக்கும் மீன்கள் - அதிர்ச்சியில் மக்கள்

  சென்னை கொரட்டூர் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செ_து மிதந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏரி முழுவதும் மீன்கள் கூட்டம் கூட்டமாக இறந்து மிதப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதற்கான காரணம், தண்ணீரில் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளதா? அல்லது ஆக்சிஜன் அளவு குறைந்ததா? என அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மீன்கள் இறப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பது சோதனைக்கு பின்னரே தெரியவரும்

திருவண்ணாமலை: மீண்டும் மாற்றம்

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் செல்போன்களை லாக்கரில் வைக்க வசூலிக்கப்பட்ட ரூ.5 கட்டணம் நிறுத்தம். > இனி பக்தர்கள் தங்கள் செல்போன்களை இலவசமாக லாக்கரில் வைத்துச் செல்லலாம் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு .